இடம் பெயர்ந்த இலஞ்சம்
ஹாஹாஹா...
கலெக்டர் அம்மா
தாசில்தார்களை இடம் மாற்றம் செய்யவில்லை;
லஞ்சத்தை இடமாற்றம் செய்திருக்கிறார்கள், அவ்வளவே!
இலஞ்சம் இடம் மாறுகிறது என்ற சொற்றொடரை நான் சொல்லவில்லை; கர்மவீரர் காமராசர் அவர்கள் சொன்னதாகும்.
ஒரு முறை முதல்வரான காமராசர் அவர்களிடம் மூத்த கட்சிக்காரர் ஒரு பொதுப்பணித் துறை பொறியாளர் இலஞ்சம் வாங்குகிறார் என்றும் அவரை உடனே வேறு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
முதல்வர் காமராசர் சற்று யோசித்துவிட்டு, இலஞ்சத்தை இடம் மாற்றச் சொல்கிறாய் அவ்வளவு தானே என்றார்.
உண்மை தானே?
லஞ்சம் வாங்குகிற வரை இடம் மாறுதல் செய்வதால் அவர் லஞ்சம் வாங்குவதை நிறுத்தி விடப் போவதில்லை. புது இடத்தில் கொஞ்சம் தடுமாறுவார்; புதிய பதவியில் லஞ்சம் வாங்குவதற்கான வழிகள் நுணுக்கங்களை ஆராய்ந்து அறிந்த பின்னர் வழக்கம்போல் லஞ்சம் வாங்குவதில் முந்தைய இடத்தை காட்டிலும் இங்கே புதிய இடத்தில் முந்தி செல்வார்.
இந்தக் காலத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் ஜாமீன் எடுத்து வெளியே வந்து விடுகிறார்கள். அதன் பின்னே குறிப்பிட்ட காலம் கடந்த பின் நீதிமன்றத்தை அணுகி மீண்டும் பணியிடம் வாங்கி விடுகிறார்கள்.
லஞ்சம் கேட்பதால் பாதிக்கப்படுபவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டு, துறையினரால் திட்டமிடப்பட்டு ரசாயனப் பவுடர்
வழக்கம்போல் லஞ்சம் வாங்கிய வழக்கு நீதிமன்றங்களில் ஆண்டாண்டு காலமாய் தீர்ப்புக்கு தாமதமாவதை சாதகமாகக் கொண்டு மீண்டும் வழக்கு தொடுத்து மேலும் மேலும் பதவி உயர்வும் பெற்று விடுகிறார்கள்.
இதற்கிடையில் அவர்கள் லஞ்சம் வாங்குவதையும் விடுவது கிடையாது. ஏற்கனவே லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டு சிறைக்கு சென்றமையால் இந்த தடவை நுண்ணறிவாலும் எச்சரிக்கை உணர்வோடும் மாட்டிக் கொள்ளாமல் லஞ்சம் வாங்கக்கூடிய வழிகளை உருவாக்கி கொள்கிறார்கள். அதனால் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டு மீண்டும் பணிக்கு வந்து பிழைத்தவர்கள் மறுபடியும் வாழ்நாளில் லஞ்ச வழக்கில் பிடிபடுவதே இல்லை.
ஆக, லஞ்சம் இப்படியாக எங்கிருந்தாலும் வசதி வாய்ப்போடு அமோகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அதை முற்றாக ஒழிக்கும் வழியை பாராமல் வாங்குகிற ஆளை அங்கே இங்கே மாற்றினால் லஞ்சம் ஒழிந்து விடும் என்பதும் ஒரு மூடநம்பிக்கை.
மாவட்ட ஆட்சியருக்கு மூடநம்பிக்கை கூடாது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக